இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அதிகரிக்கும் கொல்லப்பட்ட அமெரிக்க குடிமக்கள் எண்ணிக்கை
இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போரில் இதுவரை 22 அமெரிக்கர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கொல்லப்பட்ட அமெரிக்க குடிமக்கள்
6வது நாளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடுமையான போர் இன்றும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காசாவின் எல்லைப் பகுதியில் இசை திருவிழா நடைபெற்று கொண்டு இருக்கும் போது ஹமாஸ் அமைப்பினர் தங்கள் தாக்குதலை திடீரென தொடங்கினர்.
இந்த இசை திருவிழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு இருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் ஜெர்மனியர்கள், அமெரிக்கர்கள் என பல நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.
பலரை ஹமாஸ் அமைப்பினர் தங்களது பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஹமாஸ்-இஸ்ரேல் போரில் உயிரிழந்த அமெரிக்க நாட்டு மக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது என புதன்கிழமை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
The number of U.S. citizens confirmed to have been killed in the Israel-Hamas war has risen to 22, the State Department said Wednesday.
— NEXTA (@nexta_tv) October 11, 2023
"At this time, we can confirm the death of at least 22 US citizens. We express our deepest sympathies to the victims and the families of all… pic.twitter.com/Uc8TVlazSv
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த தகவலில், இதுவரை நடந்த மோதலில் குறைந்தபட்சமாக 22 அமெரிக்க குடிமக்கள் கொல்லப்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |