இஸ்ரேல் - ஹமாஸ் போர் இரண்டாம் ஆண்டு நிறைவு: பிரதமர் நெதன்யாகு சூளுரை
நம்முடைய எதிரிகளால் நம்மை உடைக்க முடியவில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
அக்டோபர் 7, 2023ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை தொடங்கிய நிலையில், இன்று அதன் இரண்டாம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.
இந்த இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரது நாட்டு மக்களிடம், ரத்தம் குடிக்கும் எதிரிகள் நம் மீது தாக்குதல் நடத்தினர் ஆனால் அவர்களால் நம்மை உடைக்க முடியவில்லை என சூளுரைத்துள்ளார்.
மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் தற்போது இஸ்ரேலிய மக்களின் பலத்தை அறிந்து கொண்டுள்ளனர்.
இந்த மோதல் ஈரானின் அச்சினை உடைத்து இருப்பதோடு, மத்திய கிழக்கின் முகத்தை மாற்றியுள்ளது மற்றும் இஸ்ரேலிய பிராந்தியத்தின் நிலப்பரப்பையும் குறிப்பிட்ட அளவு மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு இஸ்ரேலிய படை வீரர்களும், தளபதிகளும் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இலக்கை அடையும் வரை ஓய மாட்டோம்
ஹமாஸ் உடனான இந்த மோதலில் முக்கிய இலக்குகளை அடைவதில் இஸ்ரேல் தீவிரமாக இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் கூற்றுப்படி இஸ்ரேலின் முக்கிய இலக்குகளாக, பிணைக் கைதிகள் விடுதலை, பாலஸ்தீனத்தில் ஹமாஸின் அதிகாரங்களை அழித்தல் மற்றும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக காசா இருக்காது என்ற நிலையை உறுதிப்படுத்தல் ஆகியவை உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |