முடிவுக்கு வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: எகிப்து விரையும் மொசாட் தலைவர்! காசா மக்கள் நிம்மதி
ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இரு தரப்பு இறங்கியுள்ளது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேல், ஹமாஸ் போர் நடவடிக்கை ஓராண்டை கடந்து நடைபெற்று வரும் நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து நிலைமையை மேலும் தீவிரமடைந்தது.
இந்நிலையில் சமீபத்திய முன்னேற்றமாக காசா போர் நிறுத்தம் தொடர்பாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ள தகவலில், இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு தயாராக இருந்தால், ஹமாஸ் தாக்குதலை நிறுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதே நேரம் கைதிகள் பரிமாற்றம், மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது மற்றும் காசா முற்றுகை நிறுத்தம் ஆகிய கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தயார்
காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேலும் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது, எகிப்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தலைவரை அனுப்பி வைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலை பொறுத்தவரை பிணைக் கைதிகள் விடுவிப்பு முக்கிய கோரிக்கையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முழுமையாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |