இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: ஜோ பைடன் அழைப்பை நிராகரித்த பாலஸ்தீன ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பை பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே தீவிரமான போர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் படையினரை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேலிய ராணுவம் காசா நகரை சுற்றி வளைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
சமீபத்தில் காசா நகரில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
Avi Ohayon/GPO
இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர், ஆனால் இஸ்ரேலிய ராணுவம் இதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அத்துடன் காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை என வாதிடினார்.
பாலஸ்தீன ஜனாதிபதி மறுப்பு
இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக உதவி செய்யுமாறும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் கோரிக்கை வைத்து இருந்தார்.
இதன் அடிப்படையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவையும், பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் இருவரையும் தொலைபேசி மூலம் கலந்துரையாட வைக்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சென்று இருந்த போது முயற்சி செய்துள்ளார்.
ஆனால் காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிப்பது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேச்சுவார்த்தை அழைப்பை பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |