பிணைக்கைதிகள் உயிருக்கு எச்சரிக்கை: இஸ்ரேலில் களமிறங்கிய அமெரிக்க சிறப்பு படை
பணயக்கைதிகளை மீட்கும் சிறப்பு பயிற்சி பெற்ற அமெரிக்க படைகள் இஸ்ரேலுக்கு வந்து இறங்கியுள்ளனர்.
பிணைக்கைதிகளை கொல்வோம்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை குறிவைத்து தொடர் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் இதுவரை காசாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
❗️ A spokesman for Hamas terrorists Abu Obeida issued a statement promising that "any shelling of our people without warning will be met with the execution of a hostage, and we will broadcast this execution with video and audio." pic.twitter.com/bSlHvOTcFD
— NEXTA (@nexta_tv) October 9, 2023
இந்நிலையில் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அபு ஒபைடா சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை கொலை செய்வோம்.
மேலும் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் வீடியோ மற்றும் ஆடியோக்களை ஒளிபரப்புவோம் என எச்சரிக்கை தெரிவித்து இருந்தார்.
இஸ்ரேலுக்கு வந்த அமெரிக்க படைகள்
இந்நிலையில் பணயக்கைதிகளை மீட்கும் சிறப்பு பயிற்சி பெற்ற அமெரிக்க படைகள் இஸ்ரேலுக்கு வந்து இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
BREAKING:
— Visegrád 24 (@visegrad24) October 10, 2023
American Special Operations Forces trained in hostage situations have arrived in Israel.
A Pentagon official says the U.S. doesn't rule out performing operations to liberate kidnapped Americans now held in Gaza
???? pic.twitter.com/0VWEd2m9i8
இந்த அமெரிக்க சிறப்பு படைகள் ஹமாஸ் அமைப்பினர் காசா நகரில் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் விரைவில் இறங்கலாம் என தெரியவந்துள்ளது.
அதே சமயம் காசாவில் பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டுள்ள அமெரிக்கர்களை சிறப்பு நடவடிக்கை மூலம் விடுவிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா நிராகரிக்கவில்லை என்று பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |