இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர்: முக்கிய உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன?
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கை குறித்து உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையிலான போர்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் ஜெருசலேமை கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கியது.
மேலும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக காசா பகுதிக்கு கடத்தி சென்றனர். இதையடுத்து இஸ்ரேல் போர் பிரகடனத்தை அறிவித்து பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
AFP
இந்த மோதல் நடவடிக்கையில் இதுவரை காசாவில் ஒட்டுமொத்தமாக 1100 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,23,000 பேர் தங்கள் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
உலக தலைவர்கள் கருத்து
இந்நிலையில் ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் குறித்து உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா
இஸ்ரேலுக்கான தங்கள் ஆதரவு மிகவும் திடமானது மற்றும் அசைக்க முடியாதது, இந்த போர் நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு கப்பல்கள், விமானங்கள், மற்றும் தேவையான கூடுதல் ஆயுதங்களை அனுப்புகிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான்
பாலஸ்தீனர்களின் தற்காப்பு உரிமையை ஈரான் ஆதரிக்கிறது, மேலும் பல ஆண்டுகளாக இந்த பகுதிகளை ஆபத்தான பகுதியாக மாற்றியதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ரஷ்யா
தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும், விரிவான, நீடித்த மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சமாதானத்தை நோக்கி இருநாடுகளும் பேச்சுவார்த்தை தேவை.
AP
போரால் இந்தியா-இஸ்ரேல் வர்த்தகம் பாதிக்குமா? இஸ்ரேலில் இருந்து இந்தியா எந்தப் பொருளை இறக்குமதி செய்கிறது?
பிரித்தானியா
பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வலுவான ஆதரவு வழங்குகிறோம், மேலும் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம், பயங்கரவாதம் வெல்லாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
சீனா
இருநாடுகளும் கட்டுப்பாட்டை கடை பிடித்து உடனடியாக மோதலை நிறுத்த வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |