தடுப்பூசி போட்ட 62 பேருக்கு புதிதாக இதயத்தில் பிரச்சினை! பீதியில் மக்கள்., ஆய்வில் இறங்கிய பிரபல நாடு
இஸ்ரேல் நாட்டில் ஃபைசர் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 62 பேருக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் 5 மில்லியனுக்கும் அதிகமாக மக்களுக்கு அமெரிக்க மற்றும் ஜேர்மன் நிறுவனங்களான Pfizer Inc. மற்றும் BioNTech SE தயாரித்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதில் சுமார் 62 பேருக்கு இதயத்தில் தசை வீக்கம் (heart-muscle membrane) ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், மீதம் உள்ளவர்கள் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட 1,00,000 பேரில் ஒருவருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதே நேரம் பெரும்பாலும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஃபைசர்-பயோஎன்டெக்கின் தடுப்பூசியை தடை செய்வது அல்லது மற்ற நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு இதுவரை பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், பாதிப்பை விட பயன்கள் மிக மிக அதிகமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தற்போது ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்று இதய அழற்சியை அனுபவித்த சில வழக்குகளை ஆய்வு செய்வதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.