கொலைப்பட்டியலில் இருந்து ஈரானின் இரு தலைவர்களை விடுவித்த இஸ்ரேல்
பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோரை இஸ்ரேல் தனது கொலைப்பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
அவர்களை ஒழித்துக்கட்ட
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரை அமெரிக்கா குறிவைக்க வேண்டாம் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்தே இவர்கள் இருவரையும் இஸ்ரேல் தனது கொலைப்பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. ஈரான் போர் தொடர்பில் தற்போது மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தான் வட்டாரத்தில் இருந்து கசிந்த தகவலில்,
இஸ்ரேலியர்களிடம் இந்த இருவரின் இருப்பிடத் தகவல்கள் இருந்தன, அவர்களை ஒழித்துக்கட்ட அவர்கள் விரும்பினர். அவர்களும் ஒழிக்கப்பட்டால், பேச்சுவார்த்தைகளுக்கு வேறு யாரும் முன்வர மாட்டார்கள் என்று பாகிஸ்தான் தரப்பு அமெரிக்காவிடம் கூறியதாகவும்,
இதனையடுத்தே, அமெரிக்கா இஸ்ரேலியர்களைப் பின்வாங்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சாத்தியமான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு,
கொலைப்பட்டியலில் இஸ்ரேல் இணைத்துள்ள அதிகாரிகளின் பட்டியலிலிருந்து அந்த இரண்டு உயர்மட்ட ஈரானிய அதிகாரிகளும் தற்காலிகமாக நீக்கப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் முன்னர் செய்தி வெளியிட்டது.

பாகிஸ்தான் நேரடித் தொடர்பு
அந்த இரு அதிகாரிகளும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை மட்டுமே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
ஆனால் அதில் பாகிஸ்தான் தரப்பின் கோரிக்கை என்பது தொடர்பான தகவல் ஏதும் இடம்பெறவில்லை. ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு வருகின்றன.

பெரும்பாலான பிற நாடுகளுக்கு நேரடித் தொடர்பு வழிகள் முடக்கப்பட்டிருக்கும் வேளையில், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் பாகிஸ்தான் நேரடித் தொடர்பைப் பேணி வருகிறது.
மட்டுமின்றி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் வழியாக அனுப்பிய 15 அம்சத் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |