காசாவில் மீண்டும் வான்வழித் தாக்குதல்: 8 பேர் வரை உயிரிழப்பு: இஸ்ரேல் விளக்கம்
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் நடத்திய இரவு நேர வான்வழித் தாக்குதலில் குறைந்தது 8 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக பாலஸ்தீன ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அதே போல வடக்கு காசா பகுதியில் ஜபாலியா அருகே 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பாலஸ்தீன ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஹமாஸ் படையினரும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தற்போதுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இஸ்ரேல் குற்றச்சாட்டு
காசா எல்லைப் பகுதியில் உள்ள மஞ்சள் கோடு எனப்படும் பாதுகாப்பு எல்லையை தாண்டி 5 ஆயுதமேந்திய தாக்குதல்தாரிகள் முன்னேறியதால் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் தற்போது உள்ள போர் நிறுத்த நடைமுறைகள் தொடர்வதாகவும் இஸ்ரேலிய தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |