நெதன்யாகுவின் சாணக்கியத்தனம்... போர்நிறுத்தத்தை ரத்து செய்து ஈரான் மீது கொலைவெறியில் ட்ரம்ப்

Benjamin Netanyahu Donald Trump Iran
By Arbin Jul 10, 2026 05:45 PM GMT
Report

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்பார்த்தது போலவே, ஈரான் மீதான் போர் நிறுத்தத்தை ரத்து செய்து, மீண்டும் தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளார் ட்ரம்ப்.

ஈரான் மீண்டும் சதி

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னால் இஸ்ரேல் உளவுத்துறை இருப்பதாகவே தகவல் கசிந்துள்ளது.

நெதன்யாகுவின் சாணக்கியத்தனம்... போர்நிறுத்தத்தை ரத்து செய்து ஈரான் மீது கொலைவெறியில் ட்ரம்ப் | Israel Intel Convince Trump To

ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் ஒரு வார காலம் நீண்ட இறுதி ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு ட்ரம்ப் முடிவு செய்தார்.

அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல ஈரான் மீண்டும் சதி செய்து வருவதாக உறுதி செய்யும் புதிய உளவுத் தகவல்களை இஸ்ரேல் பென்டகனுடன் பகிர்ந்துள்ளது.

இஸ்ரேல் கூறிய இந்தக் கொலைத் திட்டமானது அமெரிக்கா மற்றும் ஈரானிடையே புதிய பதற்றத்தை உருவாக்கியது. அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்வதாக அறிவித்தார்.

ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் புதிய சதி: பீதியைக் கிளப்பும் இஸ்ரேல்

ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் புதிய சதி: பீதியைக் கிளப்பும் இஸ்ரேல்

சமீபத்திய வாரங்களில் அந்தத் திட்டம் குறித்த தொடர்ச்சியான சலசலப்பை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்திருந்தது; ஆனால், இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை புதியதாகவும், ஒரு குறிப்பிட்ட சதித்திட்டம் சார்ந்ததாகவும் இருந்தது என CNN செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதா அல்லது போர்நிறுத்தத் திட்டத்தைத் தொடர்வதா என்று ட்ரம்ப் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில்,

அவரது முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கும் ஒரு முயற்சியாகவே இஸ்ரேலிய உளவுத்துறை கொலை முயற்சி என்ற திட்டத்தை செயல்படுத்தியதாக சில அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நெதன்யாகுவின் சாணக்கியத்தனம்... போர்நிறுத்தத்தை ரத்து செய்து ஈரான் மீது கொலைவெறியில் ட்ரம்ப் | Israel Intel Convince Trump To

அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு இஸ்ரேல் அளித்த நம்பகமானத் தரவுகள் தொடர்பில் தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இஸ்ரேலின் எச்சரிக்கைக்கு முன்னதாக அமெரிக்கா அதைத் தானே சரிபார்க்கவோ அல்லது கண்காணிக்கவோ இல்லை என்று CNN செய்தி வெளியிட்டுள்ளது.

காசிம் சுலைமானியின் படுகொலையில் அமெரிக்காவுக்குப் பங்கு இருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், ட்ரம்ப் மீது கொலைவெறியில் இருப்பதாக ஈரான் பல ஆண்டுகளாக வெளிப்படையாகவே கூறி வருகிறது.

ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில், இஸ்லாமிய புரட்சிகரப் படைப் பிரிவின் (Islamic Revolutionary Guard Corps) உயர்மட்டத் தளபதியாக இருந்தவர் காசிம் சுலைமானி.

இஸ்ரேலின் தூண்டுதலால் பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதி ஊர்வலத்தின்போது, ​​நாங்கள் ட்ரம்ப்பைக் கொல்வோம் என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு, ஈரானியர்கள் ட்ரம்ப்பின் மரணத்தை வலியுறுத்தி முழக்கமிட்டிருந்தனர்.

போரை நீட்டிக்க நெதன்யாகு

இந்த நிலையிலேயே துருக்கியில் நேட்டோ நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்ப், ஈரான் தன்னைப் படுகொலை செய்ய திட்டமிட்டு வருவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

உண்மையில், ஈரானுடன் எந்த ஒப்பந்தத்தையும் கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தேர்தல் முடியும் வரையில் போர் நீடிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்.

நெதன்யாகுவின் சாணக்கியத்தனம்... போர்நிறுத்தத்தை ரத்து செய்து ஈரான் மீது கொலைவெறியில் ட்ரம்ப் | Israel Intel Convince Trump To

இதன் ஒருபகுதியாகவே அவர் லெபனானில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறாது என்றும், காஸாவில் இரகசிய இராணுவ நடவடிக்கைகளையும் முன்னெடுத்தும் வருகிறார்.

தனது அரசியல் இலாபத்திற்காக போரை நீட்டிக்க நெதன்யாகு திட்டமிட்டு வரும்போது, மறுபுறம் ட்ரம்ப், இந்த மோதல் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்ற கவலைகளைச் சுட்டிக்காட்டி, அதிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளைத் தீவிரமாகத் தேடி வருகிறார்.

ஆனால், நெதன்யாகுவின் சாணக்கியத்தனத்தால், வளைகுடாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US