ஹமாஸை நசுக்க இஸ்ரேல் பயன்படுத்தவுள்ள புதிய லேசர் ஆயுதம்! சோதனைகள் துரிதம்
ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேல் புதிய பாதுகாப்பு அமைப்பை நிறுவ உள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் இன்று (திங்கட்கிழமை) 10வது நாளை எட்டியுள்ள நிலையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் லேசர் ஆயுதங்களை போர்க்களத்தில் நிலைநிறுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட ஒளிக்கற்றைகளை கொண்டு சுட்டு அழிக்கக்கூடிய சக்திவாய்ந்த மேம்பட்ட ஆயுதமாகும்.
ஏற்கெனவே வான்வழித் தாக்குதலைச் சமாளிக்க அயர்ன் பெஹிமோத் விமானத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹமாஸுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எல்லையில் இரும்பு வேலி அமைக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
வான்வழித் தாக்குதலை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய இந்த லேசர் பீம் ஆயுதத்தை 2025-ல் எல்லையில் நிலைநிறுத்த முன்னதாக திட்டமிடப்பட்டது. ஆனால், போர் வெடித்ததைத் தொடர்ந்து , இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் அதை விரைவில் நிலைநிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது.
'Iron Beam 2014-ல் பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாக மாறியது. இது ரஃபேல் அட்வான்ஸ் சிஸ்டம் மூலம் தயாரிக்கப்பட்டது.
வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க இஸ்ரேல் தற்போது அயர்ன் டோமைப் பயன்படுத்துகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இதில் சில குறைபாடுகள் இருப்பது தெரிந்ததே. இதன் காரணமாக உடனடியாக அயர்ன் பீம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன் முடிக்க வேண்டிய சில சோதனைகள் உள்ளன. இவை துரிதமாக முடிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Israel Iron Beam Laser, Iron Beam laser system, Israel Hamas War, Laser Defence System, Israeli Ministry of Defence