இலங்கையின் சில பகுதிகளில் இருந்து வெளியேறுங்கள்., இஸ்ரேல் தன் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் சில பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அதன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இலங்கையின் தெற்கு பகுதிகளிலுள்ள சில சுற்றுலா மையங்களை உடனடியாக விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய சுற்றுலாவாசிகளை எச்சரித்துள்ளது.
இப்பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அருகம் வளைகுடா மற்றும் தென், மேற்குக் கடற்கரைகளை மையமாகக் கொண்டு இச்செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், இலங்கையில் பாரிய பொது நிகழ்வுகளை தவிர்க்கவும் மற்றும் காத்திரமாக இருக்கவும் இஸ்ரேலிய சுற்றுலாவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க தூதரகமும் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அது, “அருகம் வளைகுடா உள்ளிட்ட பிரபலமான சுற்றுலா பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸ் துறையும் அந்தப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.
“இந்த இடம் சர்ஃபிங் செய்யப் பிரபலமானது, அதனால் அதிகமான இஸ்ரேலியர்கள் இங்கு வருகை தருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என கொழும்பில் பேட்டியளித்த காவல்துறை செய்தித்தொடர்பாளர் நிஹால் தால்துவா தெரிவித்தார்.
பிரபலமான கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களால் சிறந்த சுற்றுலா இடமாக விளங்கும் இலங்கை, அண்மைய நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதால், இந்த ஆண்டு முதல் எட்டு மாதங்களில் 15 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |