ஹமாஸ் மூத்த அதிகாரியை வேட்டையாடிய இஸ்ரேல்! வெளியீட்டுள்ள வீடியோ ஆதாரம்!
ஹமாஸின் மற்றொரு மூத்த அதிகாரிகளை கொன்று இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் வெளியிட்டுள்ள வீடியோ
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரை பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பதுடன் ஹமாஸ் தலைவர் மற்றும் பல்வேறு மூத்த ஹமாஸ் அதிகாரிகளும் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டு உள்ளனர்.
Here is* Izz al-Din Kassab, a senior H×mas terrorist in Gaza 👇
— Dr. Eli David (@DrEliDavid) November 1, 2024
*was
pic.twitter.com/foqdvAEd12
இந்நிலையில் நவம்பர் 1ம் திகதி இஸ்ரேலிய ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் மூத்த ஹமாஸ் அதிகாரியான இஸ் அல்-தின் கசாப்(Izz al-Din Kassab) வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதல் தெற்கு காசா நகரான கான் யூனிஸில் நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |