ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - அவசரநிலை பிரகடனம்
ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் வெடிக்கும் என்ற பதற்றம் நிலவி வந்தது.
அமெரிக்க மத்திய கிழக்கில் தனது போர் கப்பல்களை நிறுத்தி வரும் நிலையில், இன்று இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது.

"இஸ்ரேல் நாட்டிற்கு அச்சுறுத்தல்களை நீக்குவதற்காக இஸ்ரேல் அரசு ஈரானுக்கு எதிராக முன்கூட்டியே தாக்குதலை நடத்தியது" என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால் இஸ்ரேல் தனது நாட்டில் வான்வெளியை மூடியுள்ளது.
மேலும், இஸ்ரேல் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் வெடிப்பு சத்தம் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், தாக்குதல் தொடர வாய்ப்புள்ளதால் ஈரானில் மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மத்திய கிழக்கில் பாரிய மோதல் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |