லெபனானில் பைலட் மண்டலங்கள்: இஸ்ரேலுடன் இறுதியான அமைதி ஒப்பந்தம்
இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் வெற்றியடைந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் - லெபனான் இடையிலான தாக்குதல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான நிபந்தனைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதில், லெபனானின் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்.

மேலும் தெற்கு லிட்டானி பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா படையினர் முழுமையாக வெளியேற வேண்டும்.
பைலட் மண்டலங்கள் எனப்படும் பிரத்யேக பகுதிகள் உருவாக்கப்பட்டு அப்பகுதிகளில் லெபனான் பாதுகாப்பு படையினர் மட்டுமே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
ஹிஸ்புல்லா படையினரின் இருப்பு மற்றும் பிற ஆயுதக் குழுக்களின் இருப்பு இந்த பிராந்தியத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இரு தரப்பிற்கும் இடையே உருவாகியுள்ள இந்த அமைதி ஒப்பந்தம் பிராந்தியத்தில் நிலையான அமைதிக்கான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |