கூடுதலாக 14 வீரர்களை இழந்த இஸ்ரேல் ராணுவம்: பலியான மொத்த வீரர்களின் எண்ணிக்கை என்ன?
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதலில் மேலும் 14 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
சனிக்கிழமை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர், இதையடுத்து இஸ்ரேலும் போர் பிரகடனத்தை அறிவித்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், லெபனான், சிரியா ஆகிய முக்கிய மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது விமானம் தாங்கி போர் கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
170 வீரர்கள் பலி
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான சண்டையில் மேலும் 14 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
The Israel Defense Forces released the names of 14 more military dead
— NEXTA (@nexta_tv) October 11, 2023
The total number of military casualties rose to 170.
In total, about 1.2 thousand people were killed in Israel from the attacks of Hamas terrorists, according to the state broadcaster Kan. About 3,000 people… pic.twitter.com/4klIaDMBY1
இதுவரை மொத்தமாக இந்த போர் நடவடிக்கையில் 170 ராணுவ உயிரிழப்புகள் நடந்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எண்ணிக்கை பொறுத்தவரை 1200 பேர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர், என்றும் 3000 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்றும் இஸ்ரேல் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |