அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 10 பேர் மரணம்
ஜெனின் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 10-க்கும் மேற்பாட்டிற் ஆபத்தான நிலையில் உள்ளதாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளில்லா விமானங்களின் உதவியுடன் தாக்குதல்
இஸ்ரேலுக்கு எதிரான மோதலின் மையமாக விளங்கும் அகதிகள் முகாமை சுமார் 2,000 இஸ்ரேலிய வீரர்கள் ஆளில்லா விமானங்களின் உதவியுடன் தாக்கினர்.
Getty Images
மின்சார இணைப்பை துண்டித்த பிறகு, இராணுவ புல்டோசர்கள் குறுகிய தெருக்களில் நகர்ந்து பல கட்டிடங்களை இடித்தன.
2002-ல் பஸ்கா கொண்டாட்டத்தின் போது 30 பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு, மிகப்பாரிய அளவிலான இராணுவ நிலைநிறுத்தம் இதுவாகும்.
AP Photos
பயங்கரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றி அழிப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இங்கு சமீபகாலமாக இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த மாதம் 4 இஸ்ரேலியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜோர்டான் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அதே நேரத்தில் மேற்குக்கரை நகரமான ரமல்லாவில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
பல ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல்
இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் அரசு பயங்கரவாத இயக்கம் என கூறுகிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமின்றி மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Getty Images
பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இப்பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவத்திற்கும், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |