இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இன அழிப்பாளர் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சாடல்
காசாவில் செய்த குற்றங்களுக்கு இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வைக்க துருக்கி முயல்கிறது என அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், காசாவில் கடந்த 4 நாட்களாக போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த போர் நிறுத்தத்தின் மூலம் பாதிப்புக்குள்ளாகி உள்ள காசா மக்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் பிணைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறி கொள்வது ஆகியவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் பேசி இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் நிறுத்தம் நிறைவடைந்த உடன் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை முன்னெடுக்கும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்
இந்நிலையில் காசாவில் பேரழிவை செய்த இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, அதற்கான பொறுப்பை ஏற்க செய்ய துருக்கி முயன்று வருவதாக அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காசாவில் உள்ள எனது சகோதரர்கள் மனித குலத்தின் மிகவும் மோசமான தாக்குதலை சந்தித்துள்ளனர், உலகின் அனைத்து மனிதாபிமானத்தின் கண்கள் முன்பே அவர்களின் குடும்பத்தை, இனக்குழுவை இஸ்ரேல் அழித்து வருகிறது.
Erdogan calls Netanyahu "butcher of Gaza"#Turkey will seek to hold #Israel accountable in international courts for the crimes that Benjamin Netanyahu's administration has committed in the #Gaza Strip. Turkish President Recep Tayyip Erdogan said.
— NEXTA (@nexta_tv) November 29, 2023
"My brothers from Gaza have… pic.twitter.com/YCkdExrkNT
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அட்டூழியத்தை காசாவில் நிகழ்த்தியுள்ளார், இதனால் அவரது பெயர் ஏற்கனவே காசாவை அழித்தவர் என ஏற்கனவே அவர் பெயர் எழுதி வைக்கப்பட்டு விட்டது என எர்டோகன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |