இஸ்ரேலின் புதிய மரண தண்டனை சட்டம்: ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு
மரண தண்டனை வழங்குவது தொடர்பான இஸ்ரேலின் புதிய சட்டம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் புதிய தண்டனை சட்டம்
இஸ்ரேலியர்களை கொலை செய்யும் மேற்கு கரை பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை எளிமைப்படுத்தும் புதிய சட்டத்திற்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு 90 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மரண தண்டனை சட்டம் நிறைவேற்றப்பட்டது இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இத்தாமர் பென்-கிவீர்-க்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் இந்த புதிய சட்டத்தை இனவெறி அடிப்படையிலான சட்டப்பூர்வ கொலைகள் என்று பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் கண்டனம்
இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜேர்மன் ஆகிய பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மரண தண்டனை என்பது மனிதாபிமானமற்ற மற்றும் மிகவும் தரம் குறைந்த தண்டனை என்று விமர்சித்துள்ளனர்.
மேலும் மரண தண்டனைகள் என்று இது போன்ற குற்றங்களை குறைக்க உதவாது என்றும் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனையை விரிவுப்படுத்தும் இஸ்ரேலிய அரசின் நடவடிக்கை அந்நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளை சிதைக்கும் அபாயம் என்று எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |