இஸ்ரேலில் புதிய அரசாங்கம்... ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என ஜனாதிபதி
To Announce Sunday Who Will Form New Government: புதிய அரசாங்கத்தை யார் அமைப்பார்கள் என்பது ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும்.
அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் தேர்தலுக்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகளை அடுத்து, புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்பதை ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அமையவிருப்பது
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று, அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை நெசெட் (நாடாளுமன்ற) உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஹெர்சாக் ஒரு காணொளிச் செய்தியில் தெரிவித்தார்.

இந்த நிலையில், 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பரிந்துரைத்ததாகவும், 67 பேர் காடி ஐசன்கோட்டை ஆதரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
இதனால் இஸ்ரேலில் காடி ஐசன்கோட் தலைமையிலான அரசாங்கம் அமையவிருப்பது உறுதியாகியுள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு கூட்டணியில் இருந்து 7 உறுப்பினர்கள் கொண்ட ஒரு கட்சி, தற்போது அவரை ஆதரிக்க மறுத்துள்ளது.
அரபு கட்சிகள் தேர்தலின் போது வெளிநாட்டு ஆதரவுடன் மோசடியில் ஈடுபட்டதாக, எந்த ஆதாரமும் இன்றி நெதன்யாகு தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகிறார்.
பிரதமரும் அவரது லிகுட் கட்சியும் சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்; அவற்றில், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் மூன்று அரசியல் செயல்பாட்டாளர்களின் கைதுகளும் அடங்கும்.
அவர்கள் ராம் கட்சியுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார்கள், இருப்பினும் அக்கட்சி தங்களுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என மறுக்கிறது.
தேசத்துரோகம்
இதனிடையே, தமக்கு இனி பிரதமராகும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியானதை அடுத்து, எதிர்க்கட்சி கூட்டணியானது அரபுத் தலைவர்கள் தலைமையிலான கட்சிகளுடன் இணைவது தேசத்துரோகத்திற்குச் சமமான செயல் என்று நெதன்யாகுவும் லிகுட் கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு, முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறாத நிலையில், புதன்கிழமை அன்று தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்தியது.