ரஷ்யாவிற்கு இணங்க உக்ரைனை வற்புறுத்திய இஸ்ரேல்: மறுப்பு தெரிவித்த அரசு அதிகாரிகள்
உக்ரைனில் நடத்திவரும் போர் தாக்குதலை நிறுவதற்காக ரஷ்யா முன்வைக்கும் நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் வற்புறுத்தியதாக வெளியாகியுள்ள அறிக்கையை இருநாடுகளும் மறுத்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியதில் இருந்தே அதற்கு பல உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து, போரை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தைகளை இருநாடுகளிடையே முன்னெடுத்து வருகிறது.
அந்தவகையில், இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்று ரஷ்ய ஜனாதிபதி புதினை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார், பின்னர் தொலைப்பேசி வாயிலாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், இருநாடுகளிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இஸ்ரேல் அதிபர் நஃப்தலி பென்னட் உக்ரைனை ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தியதாக இஸ்ரேலின் வாலா நியூஸ், ஜெருசலேம் போஸ்ட் மற்றும் அமெரிக்க செய்தித் தளமான ஆக்சியோஸ் நடத்திய அறிக்கையில் அடையாளம் தெரியாத உக்ரைன் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டது.
இதையடுத்து இதற்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள உக்ரைனின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக்(Mykhailo Podolyak) அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நாடுகளில் இஸ்ரேலும் நாடும் ஒன்றே தவிர, அதனால் ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள உக்ரைன் வற்புறுத்த முடியாது.
இது ராணுவ மற்றும் அரசியல் காரணங்களால் இந்த வழிமுறை சாத்தியமில்லாதது ஆகுகிறது.
இந்த அறிக்கைக்கு மாறாக போர் நடைமுறைகளை இன்னும் போதுமான வகையில் ரஷ்யா மதிப்பிடுமாறு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது என்பதே சரியானது என தெரிவித்துள்ளார்.
இதைப்போல இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள மூத்த இஸ்ரேல் அதிகாரியும், சர்ச்சையை கிளப்பியுள்ள அந்த அறிக்கையை முழுமையான பொய் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ஒருபோதும் ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.