இஸ்ரேல் மீது மீண்டும் சீறிப் பாயும் 150 ஏவுகணைகள்: உச்சக்கட்ட பரபரப்பில் போர்: வீடியோ
பாலஸ்தீனியர்களின் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி சீறிப் பாயும் ஏவுகணைகளின் வீடியோ வெளியாகியுள்ளது.
தீவிரமடையும் போர்
இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஆபரேஷன் என்ற பெயரில் இஸ்ரேல் மீது கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை வெறும் 20 நிமிடங்களில் ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதில் சுமார் 150 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும், 1104 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகத்தை சுட்டிக் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக Operation Iron Swords என்ற பெயரில் வான் மற்றும் முழுவீச்சு தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
Dozens of missiles launched from the #GazaStrip are flying toward #TelAviv. pic.twitter.com/7lteQJZ1b2
— NEXTA (@nexta_tv) October 7, 2023
இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே இடைவிடாத சண்டை தற்போது நடைபெற்று வருகிறது.
சீறிப் பாயும் ஏவுகணைகள்
இந்நிலையில் பாலஸ்தீனியர்களின் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி 150 ஏவுகணைகள் சீறிப்பாய தொடங்கியுள்ளது.
இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
‼️ In response to tower bombing in the center of #Gaza, #Hamas launches major 150 missile attack on #TelAviv - Hamas statement. pic.twitter.com/T7YyPEifNL
— NEXTA (@nexta_tv) October 7, 2023
இருநாடுகளுக்கு இடையிலான இந்த போர் நடவடிக்கையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலிய பகுதிகளுக்குள் புகுந்து அங்குள்ள பெண்களை பிணைக் கைதிகளாக கடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |