காசாவின் பெரும் பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: அதிகரிக்கும் போர் பதற்றம்
காசாவில் பெரிய அளவிலான நிலப்பரப்பை கைப்பற்ற போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவை கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல்
காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கணிசமான அளவு நிலப்பரப்பை கைப்பற்றப் போவதாக அறிவித்துள்ளார். இது காசா பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் காசா பகுதியில் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பாலஸ்தீனிய குடிமக்களை வெளியேற்றும்படி அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஹமாஸ் அமைப்பை அகற்றி, பிணையக் கைதிகளை மீட்க காசா மக்கள் உதவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஜனவரி மாதம் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் மாதம் முடிவுக்கு வந்தது.
இதன் காரணமாக இஸ்ரேல் காசா பகுதியில் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை அரங்கேற்றியது.
அதே நேரம் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததால் பிணையக் கைதிகள் விடுவிப்பு மற்றும் இஸ்ரேல் படைகள் வெளியேற்றம் போன்ற இரண்டாம் கட்ட நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |