சர்ச்சைக்குரிய கடல் எல்லை நிர்ணயம்.. வரலாற்று உடன்பாட்டை எட்டியதாக கூறிய பிரதமர்
இஸ்ரேல் - லெபனான் தொழில்நுட்ப ரீதியாக போரில் இருக்கும் அண்டை நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள், கடந்த 2020 இல் தங்கள் கடல் எல்லையில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் திறந்தன, ஆனால் செயல்முறையானது மீண்டும் மீண்டும் தடைகளை எதிர்கொண்டது
லெபனான் உடனான சர்ச்சைக்குரிய கடல் எல்லை தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் யாயர் லேபிட் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் மூத்த ஆலோசகர் அமோஸ் ஹோக்ஸ்டீன், இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான கடல் எல்லை தொடர்பில் முன்மொழியப்பட்ட இறுதி விதிமுறைகளின் ஆரம்ப தொகுப்பை சமர்பித்தார்.
அவரது இந்த முதல் வரைவை இஸ்ரேல் வரவேற்றது, ஆனால் லெபனான் திருத்தங்களை நாடியது. மேலும், லெபனான் மாற்றங்களை நிராகரிக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் சமீபத்திய நாட்களில் தொடர்ந்த நிலையில், ஹோக்ஸ்டீனின் சமீபத்திய வரைவு ஒப்பந்தத்தை எட்டியதாக இஸ்ரேல் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, 'எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. நாங்கள் கேட்ட மாற்றங்கள் சரி செய்யப்பட்டன' என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், பேச்சுவார்த்தையில் தலைமைப் பேரம் பேசுபவருமான இயல் ஹுலாடா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அத்துடன் ஒரு வரலாற்று உடன்படிக்கைக்கு நாங்கள் செல்வதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் யாயர் லாபிட் கூறுகையில், 'லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே சர்ச்சைக்குரிய கடல் எல்லையை வரையறுக்கும் வரலாற்று உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது வரம்பிற்குட்பட்டதாக இருந்தாலும், ஒரு ஒப்பந்தம் போர் வரலாற்றைக் கொண்ட மாநிலங்களுக்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க சமரசத்தைக் குறிக்கும். கடல் ஆற்றல் ஆய்வுக்கான வழியைத் திறக்கும் மற்றும் அவற்றுக்கிடையேயான சமீபத்திய பதட்டங்களை தளர்த்தும்' என தெரிவித்துள்ளார்.
AP
மேலும் அவர், இது இஸ்ரேலின் பாதுகாப்பை பலப்படுத்தும் எனவும், இஸ்ரேலின் பொருளாதாரத்தில் பில்லியன்களை செலுத்தி, நமது வடக்கு எல்லையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வரலாற்று சாதனை இதுவாகும் எனவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன், அமெரிக்க தூதர் அமோஸ் ஹோச்ஸ்டீனிடமிருந்து பெறப்பட்ட இறுதி வரைவின் விதிமுறைகள் லெபனானை திருப்திப்படுத்தியதாகவும், விரைவில் ஒப்பந்தம் அறிவிக்கப்படும் என்று நம்புவதாகவும் கூறினார்.
Presidency of Lebanon/Anadolu Agency