இஸ்ரேல் ஹமாஸ் போரில் புதிய திருப்பம்: போர் நிறுத்தம் செய்ய தயார்..!பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
ஹமாஸ் படையினருடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் அழுத்தம்
இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர் ஆனால் ஹமாஸ் படையினரை முழுவதுமாக ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் சாத்தியமில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
மேலும் போர் நிறைவடைந்த பிறகும் பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேலுக்கு பாதுகாப்பு தேவை என்றே கருதுகிறேன் என தெரிவித்தார்.
போர் நிறுத்தத்திற்கு சம்மதம்
இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என கூறி வந்த பிரதமர் நெதன்யாகு திடீர் திருப்பமாக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த நெதன்யாகு, காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிப்பது மட்டும் தான் இஸ்ரேலின் நோக்கம். உலக நாடுகள் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் சர்வதேச உதவி பொருட்கள் காசா மக்களை சென்றடைய அவ்வப்போது சில மணி நேரங்கள் போர் நிறுத்தத்தை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம் என பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும் பிணைக் கைதிகள் பாதுகாப்பாக வெளியேறவும் போர் நிறுத்தங்கள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் முழுநீளப் போர் நிறுத்தம் என்பது சாத்தியமே இல்லை, அது இஸ்ரேலிய ராணுவத்தின் போர் யுத்தியை பாதிக்கும் என பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |