ஹமாஸ் நிராயுதபாணி ஆக்கப்படுவார்கள்! இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு சூளுரை
ஹமாஸின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு நிராயுதபாணி ஆக்கப்படுவார்கள் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
பிணைக் கைதிகள் விடுதலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதை அடுத்து, இஸ்ரேலும் ஹமாஸும் கெய்ரோவில்(Cairo) மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வரும் நிலையில், ஜனாதிபதி டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பேச்சுவார்த்தையின் உயர்மட்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
டிரம்பின் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிணைக் கைதிகள் பரிமாற்றம் முக்கிய அம்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகு சூளூரை
இந்நிலையில் காசாவில் ஹமாஸின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் விடுதலை குறித்த அறிவிப்பை எதிர்வரும் நாட்களில் வெளியிட ஆவலாக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
மேலும் எளிமையான வழிமுறையிலோ அல்லது கடினமான வழிமுறையிலோ ஹமாஸின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு நிராயுதபாணி ஆக்கப்படுவார்கள் என்றும் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு, ராஜதந்திர மற்றும் கூட்டு அழுத்தத்தின் விளைவாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |