மீதமுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால்... இஸ்ரேல் பிரதமர் கடும் எச்சரிக்கை
ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால்...
2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது திடீர்த்தாக்குதல் நடத்தியதுடன், 251பேரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஹமாஸ் விடுவித்துவருகிறது. இருந்தும், இன்னமும் 59 பேர் விடுவிக்கப்படவேண்டியுள்ளது.
ஆனால், அந்த 59 பேரில் 24 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிணைக்கைதிகளை இன்னமும் விடுவிக்காதது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் அமைப்புக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீதமுள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிலான கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார் நெதன்யாகு.
எங்கள் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவித்தல், ஹமாஸ் ராணுவம் மற்றும் ஆளும் அதிகாரத்தின் அழித்தல் மற்றும் இஸ்ரேலுக்கு காசா ஒரு அச்சுறுத்தலாக இல்லாத நிலையை உறுதி செய்தல் என்னும் எங்கள் வெற்றி இலக்குகள் அனைத்தையும் அடையும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றும் கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |