சிரியா இராணுவத்தை மொத்தமாக நொறுக்கிவிட்டு... இன்னொரு நாட்டை குறிவைக்கும் இஸ்ரேல்
தனிமைப்படுத்தப்பட்டு வலுவிழந்து காணப்படும் ஈரான் மீது அமெரிக்காவுடன் இணைந்து மிகப்பெரிய தாக்குதலுக்கு இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
தலையிட வாய்ப்பில்லை
சிரியாவில் அசாத் தலைமையிலான இராணுவத்தின் சுமார் 85 சதவிகிதத்தை இஸ்ரேல் இராணுவம் மொத்தமாக நொறுக்கியுள்ளது. இதனால், இஸ்ரேலின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு தடை இருக்காது என்றே நம்பப்படுகிறது.
இந்த நிலையில், ஈரான் ஆதரவு நாடுகள் எதுவும் தலையிட வாய்ப்பில்லை என்பதை புரிந்துகொண்ட இஸ்ரேல், இந்த அரிய வாய்ப்பினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளது.
சுமார் 48 மணி நேரத்தில் 480 தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுத்த இஸ்ரேல், சிரியாவில் அமைக்கப்பட்டிருந்த விமான எதிர்ப்பு அமைப்புகளில் 85 சதவிகிதத்தை மொத்தமாக அழித்துள்ளது.
அசாத் தலைமையிலான சிரியா நாடு எப்போதும் ஈரான் ஆதரவு நிலையை எடுத்து வந்துள்ளது. தற்போது அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி, லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகளும் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மீது தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் வாய்ப்புக்காக காத்திருந்துள்ளது. இஸ்ரேலின் இந்த முடிவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதே காரணமாக கூறப்படுகிறது.
பயன்படுத்திக்கொள்ள முயற்சிகள்
ஆனால் இஸ்ரேலுக்கு தற்போது அந்த அரிய வாய்ப்பு அமைந்துள்ளது. அணு ஆயுதங்களை உருவாக்கும் திட்டம் தங்களுக்கு இல்லை என்றே ஈரான் இதுவரை கூறி வந்துள்ளது. அணு சக்தியை பொதுமக்கள் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஆனால், 2003 வரையில் இராணுவ தேவைகளுக்கான அணு ஆயுத திட்டங்களை ஈரான் செயல்படுத்தி வந்ததாகவே அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது. தற்போது அந்த திட்டத்தை ஈரான் முழுமையாக கைவிடவில்லை என்றே இஸ்ரேல் நம்புகிறது.
இந்த நிலையில், ஈரான் அணு ஆயுத திட்டங்களை மொத்தமாக அழிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஒத்துழைக்கும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும், புதிதாக பொறுப்பெடுக்க இருக்கும் டொனால்டு ட்ரம்ப் தெரிவிக்கையில் ஈரான் அணு ஆயுத திட்டங்கள் தொடர்பில் விசாரிக்கப்படும் என்பதுடன், வான் தாக்குதலுக்கும் வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இஸ்ரேல் தற்போது இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முயற்சிகள் முன்னெடுத்து வருவதாகவே கூறபப்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |