உக்ரைனில் ரஷ்யா போன்று... இஸ்ரேல் ராணுவ தளபதியின் பேச்சால் எழுந்த அச்சம்
காஸாவில் மிக மோசமான தாக்குதலை முன்னெடுத்து வரும் இஸ்ரேல் ராணுவம் அடுத்து, உக்ரைனில் ரஷ்யா ஊடுருவியது போன்று லெபனான் மீது படையெடுக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்த அழுத்தம்
காஸா மீதான தாக்குதல்களுக்கு ஆயுத உதவிகள் வழங்கிவந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தற்போது ஹிஸ்புல்லா படைகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட அழுத்தம் அளித்து வருகிறது.
தொடர்ந்து மூன்று நாட்களாக லெபனான் மீது உக்கிரமான வான் தாக்குதலை முன்னெடுத்து வந்த நிலையில், இஸ்ரேல் ராணுவ தளபதி Herzi Halevi தெரிவிக்கையில், வான் தாக்குதலின் நோக்கம் என்பது ஹிஸ்புல்லா படைகளின் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தி, இஸ்ரேல் ராணுவம் எல்லை கடக்கும் சாத்தியத்திற்கு தயார் படுத்துவதே என்றார்.
காஸாவில் ஹமாஸ் படைகளை ஒடுக்கியது போன்று லெபனானில் கிராமம் கிராமமாக சென்று ஹிஸ்புல்லா படைகளை மொத்தமாக ஒழிப்போம் என்றார். ஆனால் அமெரிக்காவின் பென்டகன் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் தெரிவிக்கையில்,
இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் உடனடியாக முன்னெடுக்கப்படும் என்பது உறுதியல்ல என்றார். புதன்கிழமை இஸ்ரேல் தலைநகர் மீது நீண்ட தூர ஏவுகணைகளால் ஹிஸ்புல்லா படைகள் தாக்குதலை முன்னெடுக்க, பதிலுக்கு போரில் முதல் முறையாக பெய்ரூட்டின் வடக்கே உள்ள மலைப்பகுதிகளை இஸ்ரேல் குறிவைத்தது.
மோசமான சூழலுக்கு காரணம்
அத்துடன் மிக மோசமான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே, போருக்கான நேரம் இதுவல்ல என்பது போன்ற எச்சரிக்கை ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்ரேலுக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மத்திய கிழக்கில் தற்போதைய மிக மோசமான சூழலுக்கு காரணம் ஜோ பைடனின் நிர்வாகத்திறனற்ற செயற்பாடுகளே என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்குமான மோதலை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தினால், அது காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைகளுக்கும் இடையிலான மோதலை நிறுத்த உதவலாம் என்றே ஜோ பைடனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காஸா மீதான போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே ஹிஸ்புல்லா ஒரு ஒப்பந்தத்திற்கு தயாராகும் என்றே கூறுகின்றனர்.
இதற்கு பிரான்ஸ் மற்றும் அரேபிய நாடுகளின் ஆதரவை அமெரிக்கா நாட உள்ளது. லெபனான் மீதான ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |