ரஃபாவில் இஸ்ரேல் களமிறக்கியுள்ள நவீன போராயுதங்கள் - அடுத்து நடக்கவிருப்பது என்ன?
காசாவில் உள்ள கடைசி பிரதேசமான ரபாவின் தெற்கு எல்லையில் உள்ள philadelphi corridor என்கிற பகுதியை இஸ்ரேலிய படைகள் தமது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதாக அறிவிப்பு வெளியான அதே நேரத்தில், காசா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை இன்னும் 7 மாதங்களுக்கு தொடரும் என்கின்ற அறிவிப்பும் கூடவே வெளியாகி இருக்கின்றது.
philadelphi corridor என்பது காசாவையும் எகிப்தையும் பிரிக்கும் எல்லையில் உள்ள 14 கிலோ மீற்றர் நீளமான எல்லைப் பகுதியாகும்.
சர்ச்சைக்குரிய இந்த பகுதிக்குள் யுத்த தாங்கிகள் சகிதமாக திடீரென்று உள் நுழைந்த இஸ்ரேலிய படையினர், காசாவையும் இஸ்ரேலையும் பிரிக்கின்ற அந்த சூனிய பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
philadelphi corridor ஐ கைப்பற்றிய செய்தியை இஸ்ரேலிய படையினர் வெளியிட்ட நேரத்தில், அந்த பகுதியில் ஹமாஸ் பாவித்ததான சில மோட்டார்களையும் அதை ஏவுவதற்கு பயன்படுத்திய தள நிலைகளையும் எகிப்தில் இருந்து ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை காசாவிற்குள் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற சில நிலக்கீழ் சுரகங்களையும் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.
உண்மையிலேயே philadelphi corridor - ஐ இஸ்ரேலிய படையினர்கள் அதிரடியாக கைப்பற்றியதை கேந்திர ரீதியாக இதை முக்கிய நகர்வாகவே கூறுகின்றார்கள்.
மேலும் இது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை முழுவதுமாக பார்க்கவும்.
வீடியோ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |