தனிநாடொன்றை அங்கீகரித்த இஸ்ரேல்: அறிவித்த பிரதமர் நெதன்யாகு..எதிர்த்த அரசு
சோமாலிலாந்து என்ற பகுதியை தனி நாடாக இஸ்ரேல் அங்கீகரித்தது.
சோமாலிலாந்து
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் ஒரு பகுதி சோமாலிலாந்து. இது 1991ஆம் ஆண்டு முதல் தனக்கென தனி அரசு, இராணுவம் உள்ளிட்டவகளை கொண்டு இயங்கி வருகிறது.

இந்த நிலையில், தனி நாடாக செயல்படும் 'சோமாலிலாந்து' என்ற பகுதி இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசு முதல் நாடாக சோமாலிலாந்தை அங்கீகரித்துள்ளது.
நெதன்யாகு
இஸ்ரேலும், சோமாலிலாந்தும் முழுமையான இராஜதந்திர உறவுகளை நிறுவுவதற்கான ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அறிவித்தார்.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு, சோமாலிய அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், தனது இறையாண்மை மீதான "தாக்குதல்" மற்றும் ஒரு "சட்டவிரோத நடவடிக்கை" என்று குறிப்பிட்டது. மேலும் சோமாலிலாந்தை நாட்டின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்றும் விவரித்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |