காசாவில் இஸ்ரேலிய ராணுவ வீரர் உடல் கண்டுபிடிப்பு: ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு
காசாவில் ஹமாஸிடம் இருந்து இறந்து பிணைக் கைதியின் உடலை மீட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஒப்படைக்கப்பட்ட பிணைக் கைதி உடல்
காசாவில் உள்ள போராளி குழுவிடம் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இறந்த பிணைக் கைதி உடல் மீட்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.//// பிணைக் கைதிகள் உடல் மீட்கப்பட்டதை இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு ஆணையம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், மீட்கப்பட்ட உடலை அடையாளம் காணும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அளித்த தகவல்
காசாவின் நகர கிழக்கு புறநகர் பகுதியான ஷெஜையாவில், இஸ்ரேலிய ராணுவ வீரர் உடல் ஒன்று மீட்கப்பட்டு இருப்பதாக ஹமாஸ் அறிவித்ததை தொடர்ந்து இந்த ஒப்படைப்பு நிகழ்ந்துள்ளது.
இருப்பினும் ஹமாஸால் ஒப்படைக்கப்பட்ட உடல் இஸ்ரேலிய ராணுவ வீரரூடையதா என்பதை இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெளிப்படுத்தவில்லை.
ஹமாஸ் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கிய பிறகே பிணைக் கைதியின் உடல் மீட்கப்பட்டு இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |