ஹிஸ்புல்லா தளங்களை தரைமட்டமாக்கிய தாக்குதல்: இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ ஆதாரம்
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை எவ்வாறு துல்லியமாக இஸ்ரேலிய ராணுவ படை தாக்கியது என்பது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
துல்லிய தாக்குதல்
இஸ்ரேல் விமானப்படை ஞாயிற்றுக்கிழமை லெபனானின் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை குறிவைத்து துல்லிய தாக்குதலை அரங்கேற்றியது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதல் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதியில் ஹிஸ்புல்லாவின் அதிகரிக்கும் அச்சுறுத்தல்களை நடுநிலைப் படுத்துவதற்காக நடத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
WATCH how the IAF acted precisely today to stop a large-scale terrorist attack from Hezbollah.
— Israel Defense Forces (@IDF) August 25, 2024
Our operation in Lebanon targeted the terrorist infrastructure Hezbollah planned to use against us, protecting Israeli families and homes. pic.twitter.com/2J3sqAnFWB
மேலும் இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது, இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில், இஸ்ரேலிய குடும்பங்கள் மற்றும் வீடுகளை குறிவைத்த ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை லெபனானில் இருந்தது என குறிப்பிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 100 போர் விமானங்கள் இந்த ராணுவ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |