பாலஸ்தீனத்தில் பிணைக் கைதிகளாக இருந்த 10 இந்தியர்கள்! பத்திரமாக மீட்ட இஸ்ரேல் ராணுவம்
பாலஸ்தீனத்தில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 10 இந்தியத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்
டந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி, ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் நடத்திய அதிர்ச்சித் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
250 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் நடத்திய தொடர் தாக்குதலில் 48,440 பேர் உயிரிழந்தனர்.
இந்திய பிணைக் கைதிகள் மீட்பு
இந்த சூழ்நிலையில், இஸ்ரேலில் சுமார் 16,000 இந்தியத் தொழிலாளர்கள் கட்டிடப் பணி மற்றும் விவசாயத் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சராசரியாக மாதம் ரூ.1.37 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 10 இந்தியத் தொழிலாளர்களை பாலஸ்தீன நபர்கள் அதிக ஊதியம் தருவதாக கூறி மேற்கு கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்குள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக அவர்கள் கொடூரமாக பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களைப் பறித்த கடத்தல்காரர்கள், அவற்றைப் பயன்படுத்தி இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற போது அதிர்ஷ்டவசமாக பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், 10 இந்தியர்கள் மேற்கு கரையில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மேற்கு கரை பகுதியில் உள்ள அல்-ஐயீம் கிராமத்திற்குள் அதிரடியாக நுழைந்து 10 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டனர்.
அவர்கள் இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்தியர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |