இஸ்ரேல் திட்டத்தால் மிகப்பெரிய பேரழிவு காத்திருக்கிறது! பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் எதிர்ப்பு
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் நிரந்தர போருக்கு வழிவகுக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் பகீர் திட்டம்
காசாவில் ராணுவ நடவடிக்கையை விரிவுப்படுத்தி நகரை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுக்கும் முடிவுக்கு இஸ்ரேல் அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்து இருந்தது.
இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், இஸ்ரேலின் திட்டம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்ரோன் கடும் எதிர்ப்பு
இந்நிலையில், இஸ்ரேலின் திட்டம் மிகப்பெரிய அழிவுக்கும், நிரந்தர போருக்கும் வழிவகுக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.
மேலும் இதனால் பாதிக்கப்படுவது இஸ்ரேலிய பிணைக் கைதிகளும், காசா பொதுமக்களும் தான் என மக்ரோன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் காசாவை பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகளை கையில் எடுக்க வேண்டும் , அதற்கான அமைப்பை காசா நகரில் நிறுவ வேண்டும் என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக மற்ற உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தனது குழுவை கேட்டுக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |