நீங்கள் மத்தியஸ்தர் இல்லை; நீங்களே பிரச்சினை - பாகிஸ்தானை சாடும் இஸ்ரேல்
பாகிஸ்தான் மத்தியஸ்தர் இல்லை, பிரச்சினை என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.
பாகிஸ்தான் மத்தியஸ்தம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் அமெரிக்கா இடையே நடைபெற்று வந்த போர், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் போர் நிறுத்தத்திற்கு வந்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்த கோரிக்கையில் லெபனான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என ஈரான் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த போர் நிறுத்தம் லெபனானிற்கு இல்லை எனக்கூறி, லெபனானில் இஸ்ரேல் பாரிய தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் லெபனானில் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். லெபனானில் தாக்குதல் தொடர்ந்தால், போர் நிறுத்தத்தில் இருந்து விலக நேரிடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இஸ்ரேலை விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சர்
இந்நிலையில், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் தனது எக்ஸ் பதிவில், "இனப்படுகொலையை அரங்கேற்றும் தீய சக்தியான இஸ்ரேல், மனித குலத்திற்கே ஒரு சாபக்கேடு. இஸ்லாமாபாத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது, லெபனானில் இனப்படுகொலை செய்யப்படுகிறது.

அப்பாவி குடிமக்கள் இஸ்ரேலால் கொல்லப்படுகிறார்கள், முதலில் காசாவிலும், பின்னர் ஈரானிலும், இப்போது லெபனானிலும் ரத்த ஆறு ஓயாமல் தொடர்கிறது.

ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்காக பாலஸ்தீனிய மண்ணில் புற்றுநோய் போன்ற அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிய வேண்டும் என்று நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் கண்டனம்
ஆசிஃப்பின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லெய்டர், "அயதுல்லாக்கள் 'இஸ்ரேலுக்கு மரணம்' என்று முழக்கமிட்டனர் இப்போது 'மத்தியஸ்தர்' என்று சொல்லப்படுபவர் அதே வார்த்தைகளை எதிரொலிக்கிறார்.
The Ayatollahs chanted “Death to Israel” - and now a so-called “mediator” is echoing the same language.
— Ambassador Yechiel (Michael) Leiter (@yechielleiter) April 10, 2026
You are not a mediator Mr. Asif, you are the problem.
Even if it is to your dismay, Israel is here to stay. That’s not for negotiation. pic.twitter.com/po7MEBUh4Q
நீங்கள் மத்தியஸ்தர் இல்லை நீங்கள் பிரச்சினை. உங்களுக்கு அது வருத்தமளித்தாலும், இஸ்ரேல் இங்கேயே நிலைத்திருக்கப் போகிறது. அது பேச்சுவார்த்தைக்காக இல்லை" என தெரிவித்துள்ளார்.
ஆசிஃப்பின் கருத்தை கண்டித்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், "இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பு மிகவும் கொடூரமானது. இது எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும் பொறுத்துக்கொள்ளக்கூடிய கருத்துஅல்ல.
The Prime Minister's Office:
— Prime Minister of Israel (@IsraeliPM) April 9, 2026
Pakistan Defence Minister’s call for Israel’s annihilation is outrageous. This is not a statement that can be tolerated from any government, especially not from one that claims to be a neutral arbiter for peace.
குறிப்பாக, அமைதிக்கான நடுநிலைத் தீர்ப்பாளர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு அரசாங்கத்திடமிருந்து" என தெரிவித்துள்ளது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஆசிஃப் இஸ்ரேல் தொடர்பான தனது பதிவை நீக்கியுள்ளார்.