ஈரான் மீது தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்... அமெரிக்க உளவுத்துறை தகவல்
அமெரிக்காவிற்கு கிடைத்த புதிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.
உறுதி செய்யப்படவில்லை
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமெரிக்க அதிகாரிகள் பலர் இத்தகவலை உறுதி செய்துள்ளனர். ஆனால் ஈரான் மீதான தாக்குதலுக்கு தற்போதைய சூழலில் இஸ்ரேல் தலைவர்கள் இறுதி முடிவெடுத்துள்ளார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் காணாத நிலையில், அமெரிக்காவின் மிரட்டலை எதிர்கொள்ள ரஷ்யா மற்றும் சீனா பக்கம் ஈரான் திரும்பலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.
தயாராக உள்ளது
ஆனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான சீனாவின் வர்த்தகப் போர் உக்ரைனில் முன்னெடுக்கப்படும் போரால் திசைதிருப்பப்பட்டதால், ஈரானின் காப்புத் திட்டம் ஆட்டங்கண்டதாகத் தெரிகிறது.
இருப்பினும், ஈரான் பதட்டங்களை அதிகரிப்பதைத் தவிர்க்கும், அது தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக உள்ளது என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளை அதிகப்படியானது மற்றும் மூர்க்கத்தனமானது என்று நிராகரித்தார், பேச்சுவார்த்தைகள் பலனளிக்க வாய்ப்பில்லை என்று எச்சரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |