லெபனான் நகரை குறிவைத்த இஸ்ரேலின் புதிய தாக்குதல்: மூன்று பேர் உயிரிழப்பு: 9 படுகாயம்!
லெபனான் வடக்கு பகுதி நகரத்தில் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் மூன்று பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் புதிய தாக்குதல்
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு டெல் அவிவ் நகருக்கு அருகில் அமைந்துள்ள உளவு அமைப்பான Mossad தலைமையகத்தை குறிவைத்து சமீபத்தில் ராக்கெட் தாக்குதலை முன்னெடுத்தது.
இஸ்ரேல் பிராந்தியத்திற்கு ஹிஸ்புல்லா அமைப்பு வரலாற்றில் முதல் முறையாக நடத்திய இந்த தாக்குதலை IDF இடைமறித்து அழித்ததாக அறிவித்துள்ளது.
இதையடுத்து லெபனான் மீதான தரைவழி தாக்குதலுக்கு வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் பெய்ரூட்டின்(Beirut) வடக்கு நகர் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனானின் Shi'ite நகரமான Maaysrah மீது இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுன், 9 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இந்த நகரம் பெய்ரூட்டின் வடக்கே சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |