பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
மத்திய பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனானின் மத்திய பெய்ரூட் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்து இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முதலில் 6 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிகாலை வரை நீடித்த இந்த வான்வழித் தாக்குதலில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி ஹிஸ்புல்லா அமைப்பின் பலமான தளங்கள் என்று கருதப்படுகிறது.
ஈரான் மீது போர் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதலை தொடங்கியது முதல் இஸ்ரேலும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |