நாடு முழுவதும் வெடிப்பு சத்தங்கள்! ஈரானிய பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல்
தென்மேற்கு ஈரானில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
கடுமையான பதற்றம்
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் பதுங்குமிடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தியது.

இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த சூழலில், சற்று நேரத்திற்கு முன்பு தென்மேற்கு ஈரானில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பல நகரங்களில் வெடிப்புகள்
குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள கருண் மஹ்ஷஹர் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், "இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் தாக்கப்பட்டு, பகுதி சேதத்தை ஏற்படுத்தியது" என்று The Fars செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
அதேபோல் தெஹ்ரான், தப்ரிஸ், இஸ்ஃபஹான் மற்றும் கராஜ் உட்பட நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், இஸ்ரேலிய விமானப்படை மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |