உக்ரைனில் நியோ நாசி அரசாங்கத்திற்கு இஸ்ரேல் ஆதரவு! ரஷ்யா கருத்தால் பரபரப்பு
இஸ்ரேல் உக்ரைனில் நியோ நாசி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக ரஷ்ய வெளியுறவத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டதாவது, தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் உக்ரைனில் நியோ-நாசி சித்தாந்தத்தை ஆதரிக்கிறது என தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹிட்லர் யூத ரத்தம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேர்காணல் ஒன்றில் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாவ்ரோவ் கருத்துக்கு இஸ்ரேலிய அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி லாவ்ரோவ் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ரஷ்ய டாங்கிகளை சுக்குநூறாக்கிய உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்
இந்நிலையில், லாவ்ரோவ் அறிக்கை குறித்து இஸ்ரேலுக்கான ரஷ்ய தூதரிடம் இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு மறுநாள் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில இவ்வாறு பதிவிட்டுள்ளது, ரஷ்யா-இஸ்ரேல் இடையே மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.