ஈரானின் புதிய உச்ச தலைவரை வேட்டையாடுவோம்: இஸ்ரேல் பகிரங்க அறிவிப்பு
ஈரானின் புதிய உச்ச தலைவரை வேட்டையாட போவதாக இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
ஈரான் உச்ச தலைவருக்கு குறிவைக்கும் இஸ்ரேல்
ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அயதுல்லா மோஜ்தபா கமேனியை(Ayatollah Mojtaba Khamenei) வேட்டையாட போவதாகவும், செயலிழக்கச் செய்ய போவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இஸ்ரேலின் இந்த அறிவிப்பு பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய IDF செய்தி தொடர்பாளர் டெஃப்ரின், ஈரான் புதிய உச்ச தலைவரின் மர்மமான தற்போதைய நிலை மற்றும் இஸ்ரேலின் தீவிரமான இராணுவ நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்தார்.
அதில், உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அயதுல்லா மோஜ்தபா கமேனி தற்போது உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஒன்று மட்டும் சொல்ல முடியும், இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக யார் இருந்தாலும், புதிதாக தலை தூக்கினாலும் அவர்களை நாங்கள் தொடர்ந்து வேட்டையாடுவோம் என்று டெஃப்ரின் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய உயர்மட்ட அதிகாரி கொல்லப்பட்டு இருப்பதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |