பாலஸ்தீனியர்களுக்கு பதிலாக 1 லட்சம் இந்தியர்கள்., இஸ்ரேல் புதிய ஒப்பந்த திட்டம்
பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக 1 லட்சம் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த இஸ்ரேலின் கட்டுமானத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
காசாவில் நடந்து வரும் போருக்கு மத்தியில், பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இஸ்ரேலின் கட்டுமானத் துறை திட்டமிட்டுவருகிறது. போர் வெடித்ததில் இருந்து இத்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்வதே இதன் நோக்கம்.
இந்தியர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை அனுமதிக்குமாறு இஸ்ரேலிய பில்டர்ஸ் அசோசியேஷன் இஸ்ரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் உள்ள நிறுவனங்கள் ஏன் இந்தியர்களை வேலைக்கு எடுக்க விரும்புகின்றன?
காசாவில் நடந்து வரும் போரினால் பாலஸ்தீனியர்கள் பணி அனுமதியை இழந்துள்ளதால் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த இஸ்ரேலிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
காசாவில் போர் வெடிப்பதற்கு முன்பு, சுமார் 90 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்தனர். இப்போது, பணி அனுமதிச் சீட்டு பிரச்னையால் அவர்களால் வேலை செய்ய முடியாது.
இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்
மே மாதத்தில், இந்தியாவும் இஸ்ரேலும் 42,000 இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலில் கட்டுமானம் மற்றும் நர்சிங் துறைகளில் வேலை செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஒப்பந்தத்தின்படி, கட்டுமானத் துறையில் 34,000 இந்தியத் தொழிலாளர்களும், நர்சிங் துறையில் 8,000 பேரும் பணியாற்றுவார்கள்.
இப்போது, போர் வெடித்த பிறகு எழுந்த தொழிலாளர் தொகுப்பில் உள்ள இடைவெளியை நிரப்ப இஸ்ரேலிய நிறுவனங்கள் ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை நிரப்ப விரும்புவதால், புதிய ஒப்பந்தம் தேவையா அல்லது ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் மாற்றம் தேவையா என்பதைப் பார்க்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Israel News in Tamil, Israel construction sector, Israel aims to hire 1 lakh Indians, Indians replace Palestinians, Israel India Relations, Indians in Israel