இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிரடித் தடை! மாலத்தீவு அரசு அறிவிப்பு
இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிரடித் தடை விதித்து மாலத்தீவு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
சுற்றுலாப் பிரியர்களின் சொர்க்க பூமியான மாலத்தீவு, உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கானோரை ஈர்க்கும் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
இந்த நிலையில், மாலத்தீவு அரசு அதிரடியான முடிவொன்றை எடுத்துள்ளது.
முஸ்லிம் பெரும்பான்மை நாடான மாலத்தீவு, இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுத் தடை விதித்துள்ளது. இந்தச் செய்தி சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பின்னணி காரணம்
இதற்கான முக்கிய காரணம், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையாகும்.
இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் எவரும் இனி மாலத்தீவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்நாட்டு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைத் தொடர்ந்து, தற்போது மாலத்தீவும் இஸ்ரேலிய பாஸ்போர்ட் உடையவர்களுக்கு தங்கள் நாட்டுக்குள் பயணிக்க தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |