லெபனான் மீது தாக்குதல் தொடரும்... ஈரானின் எச்சரிக்கைகளை மீறி இஸ்ரேல் திட்டவட்டம்
ஈரானின் எச்சரிக்கையையும் மீறி, லெபனானில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடரப்போவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதியளித்துள்ளார்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படை
லெபனான் மீதான எந்தவொரு நடவடிக்கையும் கடுமையான பதிலடிக்கு காரணமாக அமையும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இஸ்ரேல் சபதம் செய்துள்ளது.

அமைச்சர் காட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு எதிராக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தொடர்ந்து செயல்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு இஸ்ரேல் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடியாக, தஹியே மாவட்டம் என அறியப்படும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் திட்டவட்டமாக
மேலும், ஈரானின் அச்சுறுத்தல்களை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும். லெபனானையும் ஈரானையும் இணைத்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும், நேற்று நடந்தது போலவே, பெரும் பலத்துடன் எதிர்கொள்ளப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

முன்னதாக இஸ்ரேலுக்கு எதிரான தங்களது சமீபத்திய தாக்குதல்களை நிறுத்துவதாக ஈரான் திங்கள்கிழமை அறிவித்தது; ஆனால், தெற்கு லெபனான் உட்பட, ஆக்கிரமிப்பு மற்றும் விரோதச் செயல்கள் தொடர்ந்தால், முன்பை விட மிகவும் கடுமையான மற்றும் உக்கிரமான நடவடிக்கைகள் தொடரும் என்றும் ஈரான் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |