தண்ணீர் குழாய்களை ஆயுதமாக மாற்றும் ஹமாஸ் படையினர்: கைகோர்க்கும் நட்பு நாடுகள்
இஸ்ரேலை எதிர்த்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் முன்னெடுத்து வரும் போரில் தங்கள் தாக்குதல் திறனை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
ஹமாஸ்-க்கு எதிராக கைகோர்க்கும் நாடுகள்
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் பலவும் தங்கள் ஆதரவை இஸ்ரேலுக்கு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா தங்கள் யூ.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்டு என்ற விமானம் தாங்கி போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. இதைப்போல ஜேர்மனியும் இஸ்ரேலுக்கான ஆதரவை தெரிவித்துள்ளது.
தற்போது பிரித்தானியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை ராயல் நேவி ரோந்து கப்பல்கள், உளவு விமானங்கள் மற்றும் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு பயணிக்கும் என அறிவித்துள்ளது.
தண்ணீர் குழாய்களை ஆயுதமாக பயன்படுத்தும் ஹமாஸ்
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் தாக்குதல் திறன் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் ஹமாஸ் படையினர் தண்ணீர் குழாய்களை பயன்படுத்தி ராக்கெட்டுகளை ஏவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Hamas militants showed how they make rockets out of water pipes. pic.twitter.com/lTMSJoZW62
— NEXTA (@nexta_tv) October 12, 2023
இதற்காக ஹமாஸ் படை வீரர்கள் நிலத்துக்கு அடியில் உள்ள குழாய்களை தோண்டி எடுத்து அதை ராக்கெட் ஏவும் ஆயுதமாக மாற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |