Fly dubai விமானத்தை சுட்டு வீழ்த்த இருந்த இஸ்ரேல்; சவுதி திரும்பியதால் கைவிடப்பட்டது

Dubai Israel Saudi Arabia
By Karthikraja Oct 06, 2026 09:37 AM GMT
Report

israel was ready to shoo tdown flydubai: துபாயிலிருந்து வந்த Fly dubai விமானம் கடத்தப்பட்டதாக கருதிய இஸ்ரேல் அதனை சுட்டு வீழ்த்த தயாராக இருந்தது. பின்னர் சவுதி அரேபியா நோக்கி திரும்பியதால் தனது நடவடிக்கையை கைவிட்டது.

Fly dubai விமானம்

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி, துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த 174 பயணிகள் அடங்கிய ஃப்ளைதுபாய் விமானத்தை, ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி விமானத்தை தரையில் மோதி விபத்தை ஏற்படுத்த முயற்சித்தார். 

Fly dubai விமானத்தை சுட்டு வீழ்த்த இருந்த இஸ்ரேல்; சவுதி திரும்பியதால் கைவிடப்பட்டது | Israel Was Ready To Shoot Down Flydubai Flight

விமானத்தின் விமானியான ஸ்மித் மச்சார் (Captain Smit Machchhar) அதை தடுக்க முயற்சித்த போது அவரை கோடரியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார் சக விமானி. 

உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இந்திய விமானி; ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கிய நிறுவனம்

உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இந்திய விமானி; ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கிய நிறுவனம்

கதவைத் திறந்த ஸ்மித் சத்தமிட, பயணிகள் சிலர் சென்று தாக்குதல்தாரியைக் கட்டிப்போட்டுள்ளனர். விமானம் பாதுகாப்பாக சவுதி அரேபியாவில் தரையிறங்கியது. 

Fly dubai விமானத்தை சுட்டு வீழ்த்த இருந்த இஸ்ரேல்; சவுதி திரும்பியதால் கைவிடப்பட்டது | Israel Was Ready To Shoot Down Flydubai Flight

ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியான ஹமாம் அல் ஹமாமி (29), இஸ்ரேலிலுள்ள Ben-Gurion விமான நிலையம் அல்லது இஸ்ரேல் தலைமையகத்துக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் விமானத்தை மோதி, அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல் பாணியிலான தாக்குதலுக்கு திட்டமிட்டுருந்ததாக கூறப்படுகிறது.

சுட்டு வீழ்த்த இருந்த இஸ்ரேல்

இந்நிலையில், அந்த Fly dubai விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்த இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தியமான 9/11 பாணியிலான சூழ்நிலையை இஸ்ரேல் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்ததாகவும், அதற்கான நடைமுறைகளைப் பயிற்சி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

28,000 அடிகள் கீழே சரிந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்; மீண்டும் லண்டன் திரும்பியது

28,000 அடிகள் கீழே சரிந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்; மீண்டும் லண்டன் திரும்பியது

விமானம் சில நொடிகளில் கிட்டத்தட்ட 18,000 அடி கீழே சரிந்தபோது, ​​இஸ்ரேலிய விமானப்படை விமானத்தின் காக்பிட்டைத் தொடர்புகொள்ள முயன்ற நிலையில், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, இஸ்ரேல் போர் விமானங்கள் விரைந்து அனுப்பி, இஸ்ரேலிய வான்வெளியை மூடியுள்ளது.

ஆனால், Fly dubai விமானம் சவுதி அரேபியாவை நோக்கி திரும்பியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலை நெருங்கும் ஒரு கட்டுப்பாடற்ற விமானத்தை வானிலேயே சுட்டு வீழ்த்த வேண்டும் என்பதே அந்த நாட்டின் நெறிமுறை ஆகும்.

விமான கடத்தல் சூழ்நிலை ஏற்பட்டால், தரைப்படைத் தலைமையகத்தால் விமானத்துடன் உரிய நேரத்தில் தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும்.

முடியாவிட்டால், விமானத்திற்குள் என்ன நடக்கிறது என்பதைச் சரிபார்க்க போர் விமானிகளை அனுப்பி காக்பிட், பயணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து தலைமையகத்திற்கு தெரிவிக்கும். இஸ்ரேல் பிரதமரே இந்த விடயத்தில் இறுதி முடிவினை எடுப்பார்.

ஒரு கட்டுப்பாடற்ற விமானம் இஸ்ரேலின் முக்கிய கட்டிடங்கள், விமான நிலையம் அல்லது முக்கிய இலக்குகள் மீது மோதி நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுவதை விட, பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதே சிறந்தது என்று இஸ்ரேல் கருதுகிறது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US