ஹமாஸை ஒட்டுமொத்தமாக அழிப்போம்..! இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய அறிக்கை
இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருவதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நெதன்யாகு அறிக்கை
ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் அதிதீவிர போர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய அறிக்கை ஒன்றை நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ளார்.
அதில், “அவர்களுக்கு போர் தேவைப்பட்டது, எனவே அவர்கள் போரை பெறுவார்கள், ஹமாஸ் யார் என்பதை நாம் எப்போதும் அறிவோம், ஆனால் தற்போது உலகம் அறிந்துள்ளது.
kyiv post
ஹமாஸ் என்பது ஐஎஸ்ஐஎஸ். இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது, இப்போது தான் தாக்குலை தொடங்கியுள்ளோம், விரைவில் ஹமாஸ் செயல்படும் அனைத்து இடங்களும் சிதைக்கப்படும். நாம் ஹமாஸை அழிப்போம்.
நமது நாட்டில் இன்னும் எதிரிகள் உள்ளனர், அவர்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் அனைத்தையும் செய்து வருகிறது. ஆறு நாள் போருக்கு முன்னதாக இருந்தது போல, ஒற்றுமையான அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர்களை அழைக்கிறேன் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
❗️ "Israel is launching a massive attack never seen before." Israel's Prime Minister Benjamin Netanyahu made an important statement.
— NEXTA (@nexta_tv) October 9, 2023
Here is the main points:
? They wanted war, they will get war
? We have always known what Hamas is. Now the world knows. Hamas is ISIS.
? The… pic.twitter.com/yeb3PdSFc1
அத்துடன் அமெரிக்க போர் கப்பல்களின் வருகைக்கான முக்கியத்துவத்தை எதிர்கள் உணர்ந்துள்ளனர், இதுபோல சர்வதேச நாடுகளின் ஆதரவை அதிகரித்து எதிரிகளை தடுத்து நிறுத்த தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கடினமான நாட்கள் இன்னும் நம் முன்னால் உள்ளது என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |