நாளை திறக்கப்படும் ரஃபா எல்லை: போர் நிறுத்தத்திற்கு மத்தியில் இஸ்ரேல் நடவடிக்கை
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த நடவடிக்கைக்கு பிறகு எகிப்து உடனான காசா எல்லை நாளை முதல் திறக்கப்பட உள்ளது.
மூடப்பட்ட ரஃபா எல்லை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கைக்கு பிறகு கடந்த 2024ம் ஆண்டு எகிப்து உடனான ரஃபா(Rafah) எல்லையை இஸ்ரேல் மூடியது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலையீட்டுக்கு பிறகு தற்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் நாளை முதல் எகிப்து உடனான காசாவின் ரஃபா(Rafah) எல்லை திறக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவிற்கான உதவிகளை ஒருங்கிணைக்கும் இஸ்ரேலிய இராணுவ அமைப்பான கோகார்ட்(COGAT) இதனை தெரிவித்துள்ளது.
வரையறுக்கப்பட்ட அனுமதி
ரஃபா எல்லையில் வரையறுக்கப்பட்ட நடமாட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த எல்லை கடப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைப் படை அதிகாரிகளால் கண்காணிப்படும் நிலையில், இதன் வழியாக நுழையும் அல்லது வெளியேறும் நபர்களை இஸ்ரேல் மற்றும் எகிப்து சரிபார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் நடவடிக்கையின் போது காசாவில் இருந்து வெளியேறிய பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிடம் பாதுகாப்பு அனுமதி பெற்ற பிறகு மீண்டும் காசாவிற்குள் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |