ஹமாஸ் படைகளிடம் சிக்கும் முன்னர் இஸ்ரேல் இளம்பெண் ஒருவரின் கடைசி வார்த்தைகள்
கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த கண்மூடித்தனமான தாக்குதலின் போது சிக்கிக்கொண்ட இஸ்ரேலிய பெண் ஒருவர் கடைசியாக கூறிய வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் கடும் நெருக்கடி
காஸாவில் 6 பிணைக்கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தற்போது இஸ்ரேலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் சுரங்கப்பாதையில் நுழையும் முன்னர் இவர்கள் 6 பேர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பிணைக்கைதிகளை மீட்க பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் பாலஸ்தீன மக்களை கொல்லும் நடவடிக்கைகளை மட்டுமே கடந்த 10 மாதங்களாக இஸ்ரேல் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்ட 6 பேர்களில் 24 வயதான Eden Yerushalmi என்பவர் ஹமாஸ் படைகளிடம் சிக்கும் முன்னர் கடைசியாக கூறிய வார்த்தைகள் பலரையும் கலங்க வைத்துள்ளது.
2023 அக்டோபர் 7ம் திகதி நோவா இசை விழாவின் போது Eden Yerushalmi பார்டெண்டராக வேலை செய்து கொண்டிருந்தார். சம்பவத்தன்று ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்ட இவர் சுமார் 3 மணி நேரம் தமது சகோதரியுடன் அலைபேசி உரையாடலில் இருந்துள்ளார்.
தப்பிக்க முயல்கிறேன்
ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட தமது நண்பர்களின் சடலங்களுக்கு இடையே ஒளிந்துகொண்டு, தப்பிக்க முயன்றுள்ளார். மேலும், வனப்பகுதிக்கு தப்ப முயன்ற நிலையிலேயே ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ளார்.
அவர்களிடம் சிக்கும் முன்னர் பொலிசாருக்கு தொடர்பு கொண்ட அவர், சம்பவயிடத்தில் இருந்து தப்பிக்க முயல்கிறேன், தயவு செய்து என்னைக் கண்டுபிடியுங்கள் என உயிர் பயத்தில் கெஞ்சியுள்ளார்.
குறித்த தகவல் அவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து தற்போது வெளியிடப்பட்டு, உறவினர்களை கலங்கடித்துள்ளது.
Eden Yerushalmi மட்டுமின்றி, மேலும் ஐவர் ஞாயிறன்று கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அரசாங்கத்தின் மெத்தனமே பிணைக்கைதிகளின் உயிரைப் பறித்துள்ளது என ஹமாஸ் தரப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |